மட்டக்களப்பு நகரில் கூடிய பல்லாயிரக்கணக்கானோர் – வானவேடிக்கையினால் அதிர்ந்தது காந்திபூங்கா

0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு நகரில் வானவேடிக்கைகளுடன் புதுவருடத்தினை மக்கள் வரவேற்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த மக்கள் மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடியதன் காரணமாக நள்ளிரவில் நகரில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.

இரண்டு வருடங்களின் பின்னர் புதுவருடத்தினை வரவேற்பதற்காக மக்கள் இம்முறையே ஒன்றுகூடியதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் இசை நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் அதில் பெருமளவானோர் ஆடிப்பாடி புதுவருடத்தினை வரவேற்றனர்.

இதன்போது நள்ளிரவு 12மணி முதல் காந்திபூங்காவில் பாரியளவில் வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் நாட்டில் நீடித்துவரும் நிலையிலும் ஒமிக்ரோன் தொற்று கொத்தனி ஏற்படும் என சுகாதார துறையினர் அறிவுறுத்திய நிலையிலும் பெருமளவான மக்கள் கூடியதன் காரணமாக சுகாதார அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாத நிலையிலும் சுகாதார நடைமுறைகளை பேணாத நிலையிலும் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்ததை காணமுடிந்தது.

எவ்வாறாயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக பாரியவில் வானவேடிக்கைகளுடன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு புதுவருடத்தினை வரவேற்றது இதுவே முதன்முறையாகும்.