கல்விக்காக இதுவரை எந்த அரசாங்கமும் ஒதுக்காக நிதியை இந்த வருடத்தில் தமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கும் தாம் தீர்வு வழங்கியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டே தமது அரசாங்கம் செயற்படுவதாகவும் பிரதமர் கூறினார்.
குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்விடயங்களை குறிப்பிட்டார்.
மலியதேவ மகளிர் கல்லூரியின் புதிய மூன்று மாடி கட்டிடத்தை பிரதமர் இன்று திறந்து வைத்தார்.