மார்ச் 18 இல் இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

0

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், மார்ச் 18 அல்லது 20 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

தான் விடுத்த அழைப்பை ஏற்றே அவர் இங்கு வருகிறார் எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கைக்கு உதவி, ஒத்துழைப்பு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இந்தியா முன்வந்து உதவுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையில் உச்சபட்ட நட்பு நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.