மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

0

லக சந்தையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1943.63 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்க சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1932 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்ததனை தொடர்ந்து தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டது.

எனினும் கடந்த வாரம் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.