முல்லைத்தீவு புதிய அரச அதிபர் இன்று கடமையேற்பு.

0

மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த கதிர்காமத்தம்பி விமலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்று கடமை ஏற்பு.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடந்த ஒரு வருடமாக பதவி வகித்து வந்த நிலையில் இவர் முல்லைத்தீவு மாவட்டத்திற்க்கான அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபராக மூன்று வருடமும், அம்பாறை மாவட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபராக ஜந்து வருடங்களும் இவர் கடமையாற்றியுள்ளார்.

மட்டக்களப்பு-கல்லடி பிரதேசத்தினை சேர்ந்த விமலநாதன் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபராகவும் கடமையாற்றியதுடன் 20வருட பிரதேச செயலாளர் கடமை அனுபவத்தினையும் கொண்டவர்.

மட்/ கல்லடி சிவானந்தா மற்றும் இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகள் அமைவதற்க்கு காணிகளை இலவசமாக வழங்கிய கதிர்காமத்தம்பி உடையாரின் மகனான இவர் இலங்கையின் முதலாவது தமிழ் மொழி பதிவாளர் நாயகமும் எழுத்தாளருமான திரு முத்துக்குமாரரின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது .