வாழைச்சேனை ஓட்டுமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா

0

மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வாழைச்சேனை ஓட்டுமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 27 பேருக்கு கொரோனா தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

குறித்த பகுதியில், டெங்கு தாக்கத்தினால் இன்று ஒருவர் உட்பட 113 பேர் இது வரைக்கும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தெற்று தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை மீன்சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக பல இடங்களில் தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய  மட்டக்களப்பு ஓட்டுமாவடி பிரதேசத்தில் கடந்த   சனிக்கிழமை மேற்கொண்ட பி.சி.ஆர். பிரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்றுறுதி கண்டுபிடிக்கப்பட்டு அந்த பிரதேசம் உரடங்கு சட்டம் பிற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பேலியகொடை மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி ஆர் பரிசோதனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்படடதையடுத்து கிழக்கில் இதுவரை 43 பேருக்கு கொரோனா தொற்று உள்ளவர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஓமட்டுமாவடி பிரதேசத்தில் இதுவரை இதுவரை 113 பேர் டெங்கு தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாகவும் 36 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனாவை விட மோசமானது டெங்கு எனவே இவைகளை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தற்போது வீட்டில் முடங்கியிருக்கு பொதுமக்கள் தமது வீடு மற்று அதன் பகுதிகளை துப்பரவாக வைத்திருக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகவும்” அவர் தெரிவித்தார்.