வெளிநாடுகளிலுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

0

வெளிநாடுகளிலுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மேலும் 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, 16 வெளிநாடுகளிலுள்ள தொழிலாளர் நலன்புரி பிரிவுகளுடன் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

அபுதாபி, பஹ்ரெய்ன், சைப்பிரஸ், துபாய், இஸ்ரேல், ஜோர்தான், குவைத் மற்றும் லெபனான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு இவ்வாறு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

மேலும் மலேசியா, ஓமான், மாலைதீவு, கட்டார், தென் கொரியா மற்றும் சிங்கப்பூரிலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களும் இதனூடாக பயன் பெறவுள்ளனர்.

நாட்டில் நிலவும் சூழலுக்கு இணங்க சட்ட நடைமுறைகள் தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் உதவி வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.