வைரஸ் தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்படும்போது அவற்றை உதாசீனப்படுத்த வேண்டாம்- விசேட வைத்திய நிபுணர்

0

வைரஸ் தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்படும்போது அவற்றை உதாசீனப்படுத்த வேண்டாமென வைத்திய சேவைகள் தொடர்பான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டி  மக்களை வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது சமூகத்திலிருந்து நேரடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றவர்களுக்கே தற்போது ஒட்சிசன் தேவைப்பாடு அதிகம் காணப்படுவதாக லால் பனாப்பிட்டி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்படும்போது அவற்றை உதாசீனப்படுத்தாமல், உடனடியாக வைத்தியர்களை நாடி ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை சிலர், தாம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளோம் என்பதை அறியாத நிலையில் உள்ளனர். இத்தகையவர்களினால்தான் தீவிர நிலைமையை அடையும் வீதமும் அதிகமாகக் காணப்படுகிறது எனவும் லால் பனாப்பிட்டி கூறியுள்ளார்.