12 கடற்படையினர் கொரோனாவிலிருந்து மீண்டனர்!

0

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை உறுப்பினர்கள் 12 பேர் இதுவரை மழுமையாக குணமடைந்துள்ளனர்.

கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமான்டர் இசுறு சூரிய பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் இருந்து கடற்படையினர் விலகியுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.