130 பொலிஸாருக்கு கொரோனா -2300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரை 130 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுடன் நெருங்கிப் பழகிய 2300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் 26 உத்தியோகத்தர்களும் விசேட அதிரடிப்படையின் பெருமளவு உத்தியோகத்தர்களும் இதில் அடங்குவர்.

இதேவேளை ஹொரணை பொடிலைன் ஆடைத்தொழிற்சாலையில் 145 ஊழியர்களிடம் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 34 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.