ஆசிரியர் நியமனம் 156 வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தேசிய கல்வியியல் கல்லூரிகளிலிருந்து மீள் பரீட்சை எழுதி சித்தியடைந்த 156 பேருக்கான நியமனங்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கான அனுமதியை கல்வி அமைச்சு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.
முதன் முறை பரீட்சை எழுதி சித்தியடைந்தவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், இந்நியனம் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.