157 பயணிகளுடன் ஜப்பான் நோக்கி பயணித்தது சிறப்பு விமானம்!

0

ஜப்பானுக்கான இரண்டாவது பயணிகள் விமானம் கட்டுநாயக்கவிலிருந்து பயணித்துள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யூ எல் – 454 விமானம் நேற்று(வியாழக்கிழமை) இரவு 7.20 அளவில்  ஜப்பானின் நரிட்டா விமான நிலையம் நோக்கி பயணித்துள்ளது

இவ்வாறு ஜப்பானுக்கு பயணித்தவர்களில் 10 பேர் வர்த்தக வகுப்பிலும் ஏனைய 147 பேர் சாதார வகுப்பிலும் பயணித்துள்ளர்.

மாலைத்தீவில் இருந்து நேற்று தினம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 16 ஜப்பானியர்களும் இதில் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.