கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு காலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.
பின்னர் 17 ஆம் திகதி ஞாயிறு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இயல்பு நிலையை ஏற்படுத்த முன்னர் விடுத்த அறிவிப்பு அப்படியே இருக்கும். ஊரடங்கு அமுலில் இருந்தாலும் அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் வழமை போன்றே நடைபெறும்.