180 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – இராணுவத் தளபதி

0

இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 180 வீரர்கள் இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருப்பதாக இராணுவத்தளபதியும் கொரோனா தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வர தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர் 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரும் மிஹிந்தலை மற்றும் புஸ்ஸ ஆகிய கடற்படை முகாங்களில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிசறை கடற்கடை முகாமில் 112 வீரர்கள் தனிமைபப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டிய இராணுவத்தளபதி சவேந்திரசில்வா, விடுமுறையில் சென்ற 68 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டள்ளனனர் என்றும் கூறியுள்ளார்.

முப்படை வீரர்கள் முகாம்களுக்குத் திரும்புவதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டதின் போது இதுவரை பலர் முகாமிற்கு திரும்பியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 31 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தற்பொழுது 3181 பேர் தனிமைப்படுத்தல் மருத்துவ கணகாணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், முப்படையினரால் நடத்தப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 3512 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், டாக்காவிலிருந்து விசேட விமானம் ஊடாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 74 பேர், புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.