19ஆவது திருத்தச் சட்டம் நாட்டுக்கு மிகப் பெரிய அழிவு: பீரிஸ்

0

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாட்டிற்கு அழிவானது எனவும், இந்த அழிவு காரணமாகவே மக்கள் ஈஸ்டர் தாக்குதலில் உயிர்களை இழந்தனர் எனவும் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கண்டியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

19ஆவது திருத்தச் சட்டம் இந்த நாட்டிற்கு அழிவானது. அராஜகமான நிலைமை. இதனால், மக்கள் இழப்பீட்டை செலுத்தியுள்ளனர். ஈஸ்டர் தாக்குதல் நடந்தது.

பாதுகாப்பு சீர்குலைந்தது. பாதுகாப்புக்கு பொறுப்புக் கூற எவருமில்லை. 19ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சு உட்பட எந்த அமைச்சையும் ஜனாதிபதி வகிக்க முடியாது என்று கூறுகின்றனர்.

அது முற்றிலும் தவறு. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரதான பொறுப்பு ஜனாதிபதிக்கே வழங்கப்படுகிறது. அதற்கு சட்டரீதியான அடிப்படைகளை நாங்கள் கண்டறிய முடியும்.

எனினும் 19ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சு உட்பட எந்த அமைச்சையும் வகிக்க முடியாது.

19ஆவது திருத்தச் சட்டம் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு கடந்த காலத்தில் பெரிய இழுப்பறி ஏற்பட்டது. எதனையும் செய்ய முடியாமல் போனது. அப்படியானால் இது நாட்டிற்கு பெரிய அழிவு.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மாத்திரமல்ல நாட்டு மக்களின் உயிர்களும் அழிவு. இதனால், 19ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வோம் என நாங்கள் தெளிவாக கூறியிருந்தோம்.

அதில் இருந்தே நாங்கள் ஆரம்பிப்போம். இதன் பின்னர் முழுமையான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.