2 வருடங்களுக்கு வரிப்பணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கும் மத்தியதர வகுப்பினருக்கு வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ளவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய செலாவணி தொடர்பான நெருக்கடி காரணமாக, நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கான வர்த்தமானிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.