20ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான விவாதம் இன்று ஆரம்பம்!

0

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான விவாதம் இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த விவாதம் பிற்பகல் 7.30 மணிவரை தொடரும் எனவும் முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இரவு 7.30 மணிக்கு விவாதம் முடிவடைந்ததும் குழு நிலை விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்பின்னர் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு 20ஆவது திருத்தச்சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்படும், சிலவேளை ’20’ நிறைவேறுவதற்கு இரவு 10 மணிகூட தாண்டக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி , முஸ்லிம் தேசியக் கூட்டணி, மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன ’20’ ஐ எதிர்ப்பதற்கு தீர்மானித்து எதிராக வாக்களிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தேசிய காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி. ஆகியன ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.