20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஐந்து நாட்கள் விவாதம் கோருவதற்கு சஜித் தரப்பு தீர்மானம்?

0

20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஐந்து நாட்கள் விவாதம் கோருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போதே 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஐந்து நாட்கள் விவாதத்தை ஐக்கிய மக்கள் சக்தி கோரவுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், இரு நாட்கள் விவாதத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.