20இற்கு எதிராக மட்டக்களப்பில் விளக்குகள் அணைக்கப்பட்டு போராட்டம்

0

20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக விளக்கு அணைத்து தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் போராட்டம் வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய மட்டக்களப்பிலும்  நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.00 மணிக்கு விளக்குகள் அணைக்கப்பட்டு மெழுகு திரிகள் ஏற்றப்பட்டு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இராசமாணிக்கம் இல்லத்தில் ஒன்றுகூடிய இளைஞர்கள் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இதன்போது வீட்டின் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி தமது போராட்டங்களை முன்னெடுத்தனர்.

20வது திருத்தச் சட்டம் என்பது தமிழ் மக்களை இந்த நாட்டில் குழிதோண்டி புதைக்கும் சட்டம் எனவும் அதற்கு எதிராக சிறுபான்மை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.