20வது திருத்தம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில் மஹிந்தவினை சந்தித்தார் சுமந்திரன்!

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் நேற்று(செவ்வாய்க்கிழமை) குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் தொடர்பில் பரஸ்பர கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, புதிய அரசியலமைப்பொன்று உருவாக்குவதாக இருந்தால், தமிழ் மக்களின் அனைத்துப்பிரச்சினைக்கான தீர்வினையும் உள்ளடக்கியதாகவே அது அமைய வேண்டும் என்பதில் தான் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அனைவரும் அதீத கரிசனை கொண்டிருப்பதாக சுமந்திரன் பிரதமரிடம் கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ “புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதில் அதிக அக்கறை கொண்டிருக்கின்றோம். அத்துடன் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பானது நிச்சயமாக தமிழர்களின் விடயங்களையும் உள்ளடக்கியதாகவே அமையும் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

20வது திருத்த சட்டம் குறித்த சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.