20 ஆவது திருத்ததிற்கான சட்டமூல வரைபை தயார்படுத்த ஐவர் அடங்கிய குழு!

0

இலங்கை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் உருவாக்கத்துக்கான சட்டமூல வரைபை தயார்படுத்த ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் அலிசப்ரி,  கல்வி அமைச்சர் பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,  மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, சக்திவலு அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தலைமையிலான முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அரசியலமைப்பின் 19வது  திருத்தம்  இரத்து செய்யப்பட்டு 20வது திருத்தம் உருவாக்குவதற்கு    அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதை தொடர்ந்து சட்ட வரைபு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

20 ஆம்  திருத்திற்கான சட்ட வரைபை உருவாக்கும் உபகுழுவின் நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டு ஒக்டோபர் மாதத்திற்கு  முன் திருத்தத்தை நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை 20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு முழுமையாக செயற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.