20 ஆவது திருத்தத்தில் சந்தேகங்கள் எழுந்தால் நீதிமன்றத்தை நாட முடியும் – நாமல்!

0

20 ஆவது திருத்தத்தில் எவருக்கேனும் சந்தேகங்கள் எழுந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என அமைச்சர் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எழுதியது யார், கொண்டு வந்தது யார் என்பதை ஆலோசிக்க வேண்டிய நேரம் இதுவல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியுமா, முடியாதா எனும் விடயத்தை கொள்கை ரீதியாக தீர்மானிப்பதே சிறந்தது எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.