20 ஆவது திருத்தம் – மக்களின் கருத்தாடலுக்கு விட எதிர்பார்ப்பு : கெஹெலிய ரம்புக்வெல!

0

20 ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்களை நாடாளுமன்றத்தில் ஆராயவும் மக்களின் கருத்தாடலுக்கு விடவும் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மை எவ்வாறுள்ளது என்பதைப் பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமூலத்தில் உள்ள நன்மையைப் பார்த்து எதிர்க்கட்சியிலுள்ள எவரேனும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் எனவும் அவர் இதன்போது நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.