20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

0

கொரோனா வைரஸுக்கு எதிரான மேலும் இரண்டு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் இலங்கைக்கு 9.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.