20 வருடங்களுக்கு பின்னர் கொழும்பில் காற்றுமாசுறும் வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி மையத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் ப்ரேமசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் காரணமாக கொழும்பில் வாகன போக்குவரத்து குறைவடைந்துள்ளது.
இதனால் காற்று மாசுறும் வீதம் குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக கொழும்பில் காற்றுமாசுறும் வீதம் வெகுவாக அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.