பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ 2021 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்வைத்துள்ள முக்கிய முன்மொழிவுகள்…
- சமூர்தி பயனாளிகளுக்கு 7% வட்டி விகிதத்தில் புதிய கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்.
- 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் அதன் தொழிலாளர்களுக்கு (முதலாளியின் பங்களிப்பு 0.25) காப்பீட்டுத் திட்டம்.
- தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்தம் 4000 ரூபாயினை உதவித்தொகையாக வழங்க தீர்மானம்.
- தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை, கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
- கர்ப்பிணி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் அவர்களது போஷாக்கினை மேம்படுத்தவும் நடவடிக்கை. திரிபோஷ உற்படுத்தியை அதிகரிக்க 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
- ஆசிய அபிவிருத்தி வங்கி , ஜைய்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து 1400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற அரசாங்கம் தீர்மானம்.
- சுகாதாரம் தொடர்பான நிறுவனங்களுக்கு கூடுதலாக 18,000 மில்லியன் ரூபாயினை ஒதுக்க தீர்மானம்.
- தொழில்முயற்சி பொருளாதார முறையை எதிர்வரும் 2 வருடங்களில் மேற்கொள்ள திட்டம்.
- தொழில்நுட்ப துறையின் விரிவாக்கத்திற்காக 800,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- கிராமங்களுக்கும் தொழிநுட்பத்தை கொண்டு செல்ல நடவடிக்கை. முழு நாடும் உள்ளடங்கும் வகையில் “கிராமத்துக்கு தொழிநுட்பம்” வேலைத்திட்டம்.
- பொது பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு திட்டங்களை நிவர்த்தி செய்ய 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
- தேசிய வரி வருவாயில் 50% க்கும் அதிக பங்களிப்பு செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தனியான பொது வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை.
- இலவச சுகாதாரம் மற்றும் இலவச கல்வி மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை
அரசு வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைத் தவிர மாதத்திற்கு 25 மில்லியனுக்கும் அதிகமான வருவாயைப் பெரும் வணிகங்களுக்கு வட் வரியை 8% க்கு மிகாமல் பராமரிக்க அரசாங்கம் தீர்மானம். - விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் வரி விலக்கு.
- தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினருக்கு புதிய நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்க தீர்மானம்.
- மாதத்துக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரின், வருடாந்த மொத்த தொகைக்கு வரி அறவிடுதல் தொடர்பில் ஆராயப்படும்.
- பல்வேறு நிறுவனங்களினால் சட்டத் தன்மைகளுக்கு கட்டுப்பட்டு முன்னெடுக்கப்படும், மதுபானம், சிகரெட், சூதாட்டம் என்பவற்றிற்கு 50 வீதத்திற்கும் அதிகமான பொருட்கள் மற்றும் சேவை வரி அறவிடப்படும்.
- வரிக்கொள்கையில் மாற்றமில்லை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2020 ஆம் ஆண்டுக்கான வரிக்கொள்கையைப் பின்பற்றி பொருளாதாரத்தை முன்னெடுப்போம். மாதம் 25 மில்லியனுக்கு அதிகமான வியாபாரத்திற்கு 8 வீத வற்வரி அறவிடப்படும்.
- அரச வருமானம் மற்றும் அரச செலவுக்கு இடையிலான நூறுக்கு 7 வீத இடைவெளியை 4 வீதத்திற்கு குறைக்க நடவடிக்கை எடுப்போம்.
- தேசிய வருமானத்தில் உள்ள 90 வீத அரச கடன்களை 70 வீதமாக குறைக்கவும், சர்வதேச கடன்களை குறைத்துக்கொள்ளவும் கவனம் செலுத்தப்படும்.
- மக்களை சார்ந்த அரச சேவையே மக்களின் எதிர்பார்ப்பாகும், கடந்த காலங்களைப் போன்று இல்லாது பொறுப்புக்கூறலுடனும் வீண் விரயமற்ற அரச சேவையை உருவாக்குவோம், அரச சேவையாளர்கள் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படுவதை நாம் கண்டிக்கிறோம்.
- இறக்குமதி வர்த்தகத்தை விடுத்து முழுமையான விவசாய மற்றும் கமத்தொழில் உற்பத்தியை முதன்மைப்படுத்திய பொருளாதாரமே எமது நோக்கமாகும்.
- கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் மற்றும் தொற்றா நோய்களில் இருந்து எமது மக்களை முழுமையாகக் காப்பாற்றுவதே எமது முக்கிய நோக்கமாக உள்ளது