21ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடை நீடிப்பா?

0

நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்து இறுதித் தீர்மானம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

பதுளை பொது மருத்துவமனைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா நிலைமையில் சுகாதார அமைச்சு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படாமல் இருப்பார்களானால் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.