215 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!

0

வெளிநாடுகளிலுள்ள 215 மாணவர்கள் முதற்கட்டமாக இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

வரையறுக்கப்பட்ட விமான நிலையம், விமான சேவை நிறுவனத்தின் நடவடிக்கை பணிப்பாளர் செஹான் சுமணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 215 மாணவர்களை பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கமைய, இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முதலில் சார்க் வலய நாடுகளில் கல்வி கற்கும் மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.