24 நாட்களில் வழங்கப்பட்ட தடுப்பூசி தொடர்பிலான முழு விபரம் வெளியானது!

0

நாட்டில் கடந்த 24 நாட்களில் 3 இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 28ஆம் திகதி நன்கொடையாக நாட்டுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம் நாடளாவிய ரீதியில் 12 ஆயிரத்து 555 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 66 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கடந்த 5 நாட்களில் மாத்திரம், 1 இலட்சத்து 33 ஆயிரத்து 435 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.