24 மணித்தியாலங்களில் 2709 பேர் கைது

0

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2 ஆயிரத்து 709 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் 946 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை,  கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 59 ஆயிரத்து 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதிக்குள் 16 ஆயிரத்து 436 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.