3 மாத சிசு அடங்கலாக 26 கொரோனா மரணங்கள்

0

நேற்றைய தினம் (10) 26 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.

இதனடிப்படையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

யாழ்ப்பாணம் (இருவர்), காலி, ஹெட்டிபொல, பல்லேவெல, கண்டி, மத்துகம, பாதுக்க, நேபட (இருவர்), மீகஹகொட, களுத்துறை (இருவர்), அக்குரஸ்ஸ, மொரொன்துடுவ, அனுராதபுரம், கொழும்பு – 06, களுஅக்கல, மொறட்டுவை, மள்வானை, பொரளை, கொழும்பு – 15, கந்தானை, மாஸ்வெல, வத்தேகம மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களை 26 பேரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளனர்.

இவர்களில் 3 மாத சிசு ஒன்றும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.