31, 4 மற்றும் 5ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு – சற்று முன்னர் வெளியானது முக்கிய தகவல்

0

எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், ஜூன் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நாடு முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும்.

அத்துடன், ஜூன் 4ஆம் திகதி மற்றும் 5 ஆம் திகதி ஆகிய இரு நாட்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும்.

ஜூன் 6ஆம் திகதி சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.