4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!

0

வெலிசறை கடற்படை முகாமினைச் சேர்ந்த நான்காயிரம் கடற்படை வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.