49 பேருக்கு கொரோனா தொற்று – பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டது

0

பேலியகொட மீன் சந்தையில் 46 வர்த்தகர்கள் உட்பட 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் 105 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பேலியகொட மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.