5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில் திருத்தங்கள் மேற்கொள்ள தீர்மானம்

0

இந்த வருடம் முதல் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில் திருத்தங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கிணங்க, 40 பல்தேர்வு வினாக்களைக் கொண்ட பகுதி -01 வினாத்தாளுக்கு பதிலளிக்க ஒரு மணித்தியாலம் வழங்கப்படவுள்ளது.

பகுதி -02 வினாத்தாளில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பீ.பூஜித்த தெரிவித்துள்ளார்.