5 ஆயிரம் பேருந்துகள், 400 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்!

0

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ரயில்கள் மற்றும் பேருந்துகளை பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளின் கீழ் வரும் தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் பொது போக்குவரத்தை இயக்க போக்குவரத்து அமைச்சகம் நேற்றைய தினம் தீர்மானம் எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.