5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

சமூர்த்தி பயனாளர்களுக்கும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடிக்குள்ளான குடும்பங்களுக்காக அரசாங்கம் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கி வருகின்றது.

புத்தாண்டிற்கு முன்னர் நாட்டு மக்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்க முயற்சிக்கப்பட்டது. எனினும் முடியாமல் போயுள்ளது. இதனால் பணம் கிடைக்காதவர்களுக்கு இன்றைய தினம் முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வரையில் நாடு முழுவதும் உள்ள சமூர்த்தி பயனாளர்கள் 18 லட்சம் பேருக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். அது தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களில் 75 வீதமானோர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொடுப்பனவை பெற தகுதியானவர்கள் இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.