போதைப்பொருளுக்கு இன்று சிறுவர்களே அடிமையாகிறனர்.

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறுட்ட இடங்களில் உள்ள முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கடந்த வாரம் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதனை அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் வழங்கி வைத்தார்.

முன்பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக சமூகத்தில் வலம்வர வேண்டும். அதற்காக ஆசிரியர்கள் அவர்களோடு பெற்றோர்களும் சிறந்த ஒத்துழைப்பு வழங்குவதனூடாக சிறப்பான விளைவுகளை நாம் அடையலாம்.

தற்போது இளம் வயதிலே என்பதை விட சிறுவயதிலே பல மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகி பாடசாலை இடைவிலகல் மாணவர்களாக உள்ளனர். ஆகவே சிறந்த முறையில் அத்திவாரமிடப்பட்டால் சிறந்த சமூமொன்றை நாம் கட்டியெழுப்பலாம் எனவு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுகளில் கிராம பிரதிநிதிகள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.