60 பொலிஸாரிடம் பி.சீ.ஆர் பரிசோதனை

0

பேருவளை பகுதிகளில் கடமையில் ஈடுபட்ட 60 பொலிஸார் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பரிசோதனை முடிவில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேருவளை, சீனன்கொட்டுவ, பன்னில உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே 60 பொலிஸாரிடம் பி.சீ.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.