60 வகையான மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு – அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

0

60 வகையான மருந்துகளின் விலைகளை 40 வீதத்தால் அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவின் கையொப்பத்துடன் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

2019 மே மாதம் 15 ஆம் திகதி 2123/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான மருந்துகளின் கட்டுப்பாட்டு விலைகள் மீதான ஒழங்கு விதிகள் இதன் மூலம் திருத்தப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், 500 மில்லிகிராம் Paracetamol மாத்திரை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

75 மில்லிகிராம் Aspirin மாத்திரை 7 ரூபா 8 சதமாகவும், 100 மில்லிகிராம் Aspirin மாத்திரை 12 ரூபா 53 சதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயளர்கள் பயன்படுத்தும் Gliclazide  மாத்திரை 26 ரூபா 73 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவற்றை தவிர, Insulin ஊசி மருந்து, Amoxicillin, Salbutamol, Atorvastatin உட்பட 60 வகை மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.