60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி!

0

60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுவதற்கு தொற்று நோய் தொடர்பான தேசிய ஆலோசனைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “30 – 60 வயது பிரிவினருள் நோய்களினால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

அத்துடன்,  புற்றுநோய், சிறுநீரக நோய், சீறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொண்டோர் என நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கு மேலதிகமாக சுகாதார உத்தியோகத்தர்கள் உட்பட முன்கள பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. பைசர் தடுப்பூசியே இவ்வாறு வழங்கப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.