600 இற்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக்கூடங்களில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி

0

கொரோனா என்ற புதிய கொடிய தொற்று நோய் பரவிய சில மாதங்களில், ஒன்றரை இலட்சம் பேரின் உயிரைப்பறித்துக் கொண்டது.

உலக நாடுகளின் பொருளாதாரத்தையே உருக்குலைத்துள்ளது. இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் 600 இற்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக்கூடங்களில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

இது தொடர்பான தரவுகளை உலக சுகாதார அமைப்பும் அமெரிக்க தேசிய மருத்துவ நூலகமும் கண்காணித்து வருகின்றன.

தினம் தினம் புதிய கண்டுபிடிப்புகள் சிறிதளவுக்கு நம்பிக்கையை அளித்தாலும் இன்னும் ஆதாரப்பூர்வமான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தியாவும் ஜப்பான், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.