64 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு

0

நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல்  வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குருணாகலை மாவட்டத்தின் குளியாப்பிட்டி பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் உஹன பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவும் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.