7 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை

0

நாட்டிலுள்ள 7 வைத்தியசாலைகளில், கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஐ.டீ.எச், வெலிகந்த, கொழும்பு-கிழக்கு, இரணவில, காத்தான்குடி, மினுவங்கொட, வெலிசர கடற்படை வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.