70 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று

0

நாடு முழுவதும் 70 பாடசாலை மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோஷப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை மேலும் அதிகரிப்பதற்கு முன்னர் பரவலாக மாணவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் சாதாரண தர பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இதனால் PCR பரிசோதனை நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என கல்வி அமைச்சிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.