73 சதவீதமானோர் உயர்தரத்தை தொடர்வதற்கு தகுதி!

0

வெளியிடப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 73 சதவீதமானோர் உயர்தரத்தை தொடர்வதற்கு தகுதிபெற்றுள்ளனர்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பத்தாயிரத்து 346 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ தர சித்தியை பெற்றுள்ளதாகவும், கணித பாடத்தில் 66.82 சதவீதமானோர் சித்தியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைக்குத் தோற்றிய ஏழு லட்சத்து 17 ஆயிரத்து 246 மாணவர்களில் ஐந்து லட்சத்து 56 ஆயிரத்து 256 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகள் என ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.