86 பேர் கெகுணகொல்லயில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்!

0

குருநாகல் – கெகுணகொல்ல பகுதியில் 86 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கெகுணகொல்ல பகுதியில் கடந்த முதலாம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

குறித்த பெண் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், கெகுணகொல்ல பகுதியில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 86 பேர் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பொது சுகாதார அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

எவ்வாறாயினும், இவர்களில் சிலர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத நிலையில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.