90 வீதமான பிணை மனுக்கள் இன்று நிராகரிப்பு!

0

90 வீதமான பிணை மனுக்கள் இன்று(வியாழக்கிழமை) மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினை கருத்திற்கொண்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை ஏதேனுமொரு பிணை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

121 பிணை மனுக்கள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 5ஆம் இலக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராக சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவித்த ஆட்சேபனையை கவனத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள், ஹெரோயின் கடத்தல்காரர்களின் பிணை கோரிக்கைகளை நிராகரித்துள்ளனர்.

இதுவரை சிறைச்சாலைகளில் எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை என இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.