கொழும்பினை அண்மித்த சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு!

0

கொழும்பினை அண்மித்த சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை(சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸ, கோட்டே மற்றும் கடுவல ஆகிய மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள் மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் கொட்டிகாவத்த மற்றும் முல்லேரியா ஆகிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.