இலங்கையில் பரவும் டெல்டா வைரஸ் தடுப்பூசிக்கு கட்டுப்படுமா?

0

இலங்கையில் பரவும் டெல்டா வைரஸ் மாறுபாடிற்கு எதிராக கொவிட் தடுப்பூசி நூற்றுக்கு 33 வீதமே பாதுகாப்பளிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு நடத்திய பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

33 வீதத்தினை குறிப்பிடத்தக்க அளவு பாதுகாப்பாக கருத முடியாது. அதற்காக தடுப்பூசில் பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என கல்வி பிரிவின் பிரதானியான பேராசிரியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் பரவும் ஆபத்தான கொரோனா வைரஸ் மாறுபாடான பீ.1.1.7 எல்பா தொற்றிற்காக இலங்கையில் பயன்படுத்தும் அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.